tamilnadu

img

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம்

 சேலம், செப்.5- விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி வியாழ னன்று விவசாய சங்கங்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை இருகூரில் இருந்து பெங்களூரு  தேவனகுந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும்  திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகிறது. இத்திட்டம் கோவை,  திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் விளைநிலங்கள் வழியாக நிறைவேற்ற இருக்கிறது. இதனால் விவசாயிகளும், விளைநிலங்களும் பாதிக்கப்படும் என்ப தால் மேற்கண்ட திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும் என்று  விவசாயிகள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். மேலும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்டம்  கொங்கணாபுரம் ஒன்றியம், கோண சமுத்திரம் ஊராட்சி பண்டார்கர் காடு பெரிய  மாரியம்மன் கோயில் திடலில் கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத் திற்கு பாதிக்கப்பட்ட விவசாயி  ஏழுமலை  தலைமை  தாங்கினார். சேலம் நாடாளுமன்ற  உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கை யெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் எடப்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் பெருமாள்,  விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, முன்னாள் மாவட்ட  ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் கொங்கணா புரம்  ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேஷ், சுப்பிரமணி, பழனி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.