நாகர்கோவில், ஜூலை 6- அரசு ரப்பர் கழக தொழிலாளர் பிரச்சனை க்கு தீர்வு காணஅனைத்து தொழிற்சங்கத்தி னர் திங்களன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ரப்பர் கழகத்தில் 18.05.2020 முதல் வேலை வழங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த போராட்டத்தை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டும் அரசு கொரோனா கால நிவாரணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. வழங்கிய கடன் ரூபாய் 5 ஆயிரத்தை வேலை துவங்கி 12 ஆவது நாளி லேயே ரூ.1000 பிடித்தம் செய்தனர். இது குறித்து பரிசீலிக்க தொழிற்சங்கங்கள் கூறியும் நிர்வாகம் நிராகரித்தது. மே 25 பண்டிகை விடுப்பு ஊதியத்தையும் மறுத்தது டன் மே தின விடுப்பு ஊதியமும் மறுக்கப்பட் டுள்ளது.
2020 மே முதல் தொழிலாளர்கள் வேலைக்கு தயாரான பின்பு நிர்வாகம் வேலை மறுத்துவிட்டு விடுப்பு ஊதியம் மறுப்பது சரியல்ல என்றாலும் நிர்வாகம் புரிந்து கொள்ளவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை கள் எதற்குமே தீர்வு காண முன்வராததால் கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஜூன் 12 ஆம் தேதியன்றும் நிர்வாக இயக்குநர் அலு வலகம் முன்பு ஜூன் 15 ஆம் தேதியன்றும் ஆர்ப்பாட்டம் செய்தும் நிர்வாகம் தொழிலா ளர் விரோத நடவடிக்கை தொடர்ந்து வரு கிறது. எனவே, தமிழக அரசு இப்பிரச்சனை யில் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திங்களன்று சிஐடியு உட்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு தோட்ட தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் வல்சகுமார், நிர்வாகி நடராஜன், ஐஎன்டியுசி நிர்வாகிகள் குமரன், ஸ்ரீகண்டன், தொமுச நிர்வாகி டி.நட ராஜன், பாபு, வேலப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.