நாகர்கோவில், ஆக.18- குமரி மாவட்ட மக்களின் வாழ்வா தாரத்தை சிதைக்கும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் முன்மொ ழிவை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று நாகர்கோ வில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மைலாடி, தடிக்காரன்கோணம், குழித்துறை, பேச்சிப்பாறை, மருங்கூர், திருவட்டார் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எம்.அகமது உசேன், கே.தங்கமோகன், என்.உஷா பாசி, என்.எஸ்.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடை பெற்ற கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகி கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.