tamilnadu

img

சேலம் உருக்காலை தனியார் மயத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்

சேலம், ஜூலை 5-  சேலம் உருக்காலையை தனி யார் மயமாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் முற்றும் சேலம் உருக்காலை 5-வது நுழைவாயில் முன்பு தொடர் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய பாஜக மோடி அரசு பொதுத்துறைகளை தொடர்ச்சி யாக தனியார் மயமாக்கும் நடவ டிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் உருக் காலையை தனியார் மயமாக்க சர்வ தேச அளவில் டெண்டர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று நடை பெறும் என அறிவித்துள்ளது. ஏற் கனவே சேலம் இரும்பாலை தனி யாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில ஆண்டு களாக சேலம் உருக்காலை  பாது காப்பு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உண் ணாவிரதங்கள் வேலை நிறுத்தங் கள் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட வந்தனர். ஆனாலும் தனியார் மயமாக் கும் முடிவில் மத்திய அரசு பின் வாங்காமல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருந்தது. இதில் சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் அலாய் இரும்பாலை, கர்நாடகம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய மூன்று ஆலைகளையும் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்யும் இந்த முடிவிற்கு நாடு முழுவதும்  தொழிலாளர்களிடையே கடும் ஆட்சேபம் எழுந்து போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில்  சேலம் இரும் பாலை அனைத்து தொழிற் சங்கத் தின் சார்பில் வெள்ளியன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் காலை 7 மணி முதல் மாலை வரை தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங் கிணைப்புக் குழு செயலாளர் சுரேஷ்குமார், இணை ஒருங் கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம், ஐஎன்டியுசி சார்பில் தேவராஜன், எல்டி எஃப் சார்பில் பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகேசன், பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் வெங்கடாச்சலம், சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்தவர்கள் சங்கத்தின் சார்பில் நாகராஜன் மற்றும் எஸ்சி எஸ்டி, ஓபிசி சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் முழுநேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.