சேலம், ஏப்.3- சேலம் நங்கவள்ளி ஒன்றிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நங்கவள்ளி ஒன்றியக் குழு சார்பில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரம் நங்கவள்ளி, ஆவடத்தூர், கரிக்காபட்டி, தோரமங்கலம், ஜலகண்டபுரம், சூரப்பள்ளி, சாணாரப்பட்டி, வீரக்கல், வனவாசி, நங்கவள்ளி, பெரிய சோரகை, சின்னசோரகை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜாத்தி, ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி. வெங்கடேசன், கிருஷ்ணவேணி, என்.ஆர்.ராஜகோபால், அன்பழகன், வை.சண்முகராஜா, கனகராஜ், சின்னா கவுண்டர், கோவிந்தராஜ்,நரசிம்மராஜ், வெங்கடாசலம், எஸ்.வெங்கடேசன், பொன்.பீட்டர், தங்கராஜ், சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.