சேலம், ஏப்.4-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக 24 வது வார்டில் பிள்ளையார் நகர் உள்ளிட்ட பகுதியில் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.