ஓசூர் மாநகராட்சி 37ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவி மிடுகரப்பள்ளி, பாரத் நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, மாநகரச் செயலாளர் சிபி.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
♦♦♦
சிதம்பரம் நகராட்சி 5ஆவது வார்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தஸ்லிமா வடக்குத் தெரு, புளியந்தோப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
♦♦♦
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணன் மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, வணிகர்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் முரளி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அராபத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
♦♦♦
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி வார்டு 1இல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மா.கௌதம் முத்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
♦♦♦