சேலம், பிப்.13- மேட்டூர் அணை புனரமைப்பு குழுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூரில் அணைப் பாதுகாப்பு ஆய்வு குழு தலைவர் பி.கே.மிட்டல் தலைமையில் ஆறு பேர் அடங்கிய அணை புனரமைப்பு குழுக் கூட்டம் நடந்தது. மேட்டூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அலுவ லகத்தில் நடந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேட்டூர் அணை யில் என்னென்ன புனரமைப்பு பணிகள் செய்யப்படவுள்ளன.அவற்றிற்கு ஆகும் செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கடந்தாண்டு வெள்ள காலத்தில் அணையின் உபரி நீர் போக்கி பகுதியில் ஆங்காங்கே பெயர்ந்து சேதமடைந்து இருப் பதை பராமரிக்கவும், மேட்டூர் அணையில் உள்ள மதகுகள் 86 ஆண்டுகள் ஆனதால் அதனை மாற்றலாமா அல்லது அவற்றை புனரமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பும் பழமையானது என்ப தால் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டுவது, மேட்டூர் அணை பூங்காவில் புதிய விளையாட்டு சாதனங்களை அமைப்பது மற்றும் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், அந்த திட்டங்களுக்கான செலவினங்கள் குறித்தும் விவாதிக் கப்பட்டது. இந்த விவாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணையில் வலது கரை, இடது கரை, மேல்மட்ட மதகுகள், பூங்கா பகுதியை இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.