tamilnadu

முககவசம்: ரூ.1.22 கோடி அபராதம் வசூல்

சேலம், ஜூலை 31- கொரோனா  நோய்த் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு அபரா தம் விதிக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணை யாளர் எச்சரிக்கை விடுத் தார். அதன்படி, சேலம் மாந கரத்தில் மட்டும் கடந்த 106 நாட்களில் முக கவசம் அணியாமல் பொது வெளி யில் வந்ததாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 413 நபர்களிடம் இருந்து 1 கோடியே 22 ஆயி ரத்து 165 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.