tamilnadu

img

பாலிசி மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்திடுக எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்

சேலம், அக்.17- பாலிசி மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வலியு றுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்)  சார்பில் புதனன்று சேலத்தில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.  சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள எல்ஐசி  மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா விற்கு, சங்கத்தின் கோட்ட தலைவர் எ.முருகன் நாயனார் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் கே.சிவமணி வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் துவக்கி வைத்தார்.  எல்ஐசி காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச் செய லாளர் ஆர்.தர்மலிங்கம், இந்திய வங்கி ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.தீனதயாளன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இந்த தர்ணாவில், முகவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.  பாலிசி  மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும். இன்சூ ரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. முடிவில், மாநில செயலாளர் பி.குமார் தர்ணா  போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இப் போராட்டத்தில் எல்ஐசி முகவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.