districts

img

தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்

சேலம் ஜூலை 14- தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்களை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு பணியாற்ற சொல் லும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம வங்கியின் கீழ்  பணியாற்றும் வங்கி வணிக தொடர் பாளர்களை தொடர்ந்து கிராம வங்கி  பணிகளுக்கு பயன்படுத்த வேண் டும். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வணிக தொடர்பாளர்களாக பயன்படுத்தக் கூடாது. நபார்டு வங்கி அறிவித்த ஐந்தாயிரம் ரூபாய்  தொகையை வணிகத் தொடர்பாளர் களுக்கு வழங்க வேண்டும். வணிகத் தொடர்பாளர்களிடம் எல்லை மீறி பேசும் வங்கி நிர்வாகி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். வணிகத் தொடர்பாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு கிராம வங்கி சேர்மன் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் காளிதாஸ் தலைமையில் தர்ணா  போராட்டம் நடைபெற்றது. இதில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன  மாநில செயலாளர் எஸ்.ஏ. ராஜேந்திரன், வணிக தொடர்பாளர் சங்கத்தின் மாநில தலைவர் முருகன்,  மாநில பொருளாளர் சங்கர், துணைத் தலைவர் ராமலட்சுமி, இந்திய வங்கி  ஊழியர் சம்மேளன மாவட்ட செயலா ளர் எஸ். தீனதயாளன், சிஐடியு சேலம்  மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் பரிமளா, மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி, மாவட்ட தலைவர்  பரமேஸ்வரி உள்ளிட்டு 200க்கும்  மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில்  பங்கேற்றனர்.