districts

img

தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

நாகப்பட்டினம்,  ஜூலை 27 - திமுக அரசு தனது தேர்தல்  வாக்குறுதியில் உறுதியளித்த வாறு, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய  பென்சன் திட்டத்தை கொண்டு  வர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம  உதவியாளர் உள்ளிட்ட சிறப்பு  காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் அனைவருக் கும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் மற்றும் வரையறுக் கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  சாலைப் பணியாளர்களின் 41  மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண் டும். அகவிலைப்படி நிலு வையை வழங்க வேண்டும். முடக்கப்பட்டுள்ள சரண் விடுப் பினை மீள வழங்கிட வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்  பணியிடங்களை நிரப்ப வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் மாலை நேர தர்ணா  போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா அரசு ஊழியர் சங்க வாயிலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பா.ராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர்  வி.பி.நாகைமாலி தொடக்க உரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழ கன் விளக்க உரையாற்றினார். தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் நிறைவுரை  ஆற்றினார். மாவட்ட பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றி கூறி னார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் சிவ. ரவிச்சந்திரன் தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி துவக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி  
அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டக் குழு சார்பில் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  தர்ணா நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்ட தலைவர் முனைவர்  பால்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன் துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட் டச் செயலாளர் பழனிச்சாமி, சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் சத்தியவாணி ஆகியோர் பேசி னர்.

கரூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில், கரூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் வி. கணேசன் போராட்டத்தை துவக்கி  வைத்து பேசினார். சிஐடியு  கரூர் மாவட்ட செயலாளர் சி. முருகேசன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கெ.சக்திவேல், வரு வாய்த்துறை அலுவலர்கள் சங்க  மாநில செயலாளர் எம்.எஸ்.அன்பழகன், டிஆர்இயு சங்க மாநில செயல் தலைவர் சாம்ப சிவம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஜான் பாஷா ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.