தஞ்சாவூர், ஜூலை 4- வட்டார மருத்துவ அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள சுகாதார செவிலி யர்கள் வேலைநிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பொது சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகிய நாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர், அரசு விதிமுறைகளுக்கு எதிராக செயல் பட்டு, ஊழியர் விரோத போக்கை கடைப் பிடிக்கிறார். பெண் செவிலியர்களை தரக் குறைவாகவும், இழிவாகவும், அவதூறாக வும் பேசி வருவதால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.இந்திரா கூறுகையில், “அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர், பெண் செவிலி யர்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் இரண்டு, மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ள னர். அவருடைய உத்தரவுக்கு கட்டுப்படாத வர்களுக்கு இரவு நேரப் பணி வழங்கி, செவிலியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். இவர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ப தால், மாவட்டத்தில் உள்ள சுமார் 300 செவிலியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கும் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்றார்.