சேலம், டிச.24- பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண் டனர். டிசம்.11ஆம் தேதி மகாகவி பாரதி பிறந்த தினமாகும். இதையொட்டி சேலத்தில் பாரதி வித்யாலயா சார்பில் ஞாயிறன்று இலக்கிய விழாவாக கொண்டா டப்பட்டது. இவ்விழாவிற்கு பாரதி வித்யாலயா சங்கத்தின் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி சுப்பிர மணியன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சுமதி மகாகவி பாரதியின் படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத் துடன் கலந்துகொண்டு பாரதியாரின் பொன்மொழிகளைக் கூறி ஆடல், பாடல், கவிதை மூலம் அசத்தினர். இதனைத் தொடர்ந்து பேச்சு போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாரதி வித்யாலயா பள்ளி களின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.