தஞ்சாவூர், மார்ச் 6- மகாகவி சுப்ரமணிய பாரதி யாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, இலங்கைப் பேரா தனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் ஆகிய நிறு வனங்கள் ஒன்றிணைந்து ‘‘மகா கவி பாரதியாரின் உரைநடை ஆக்கங்கள்’’ என்ற பன்னாட்டு ஆய்வரங்கினை எதிர்வரும் மார்ச் 30-31 (2022) ஆகிய இருநாட் கள் நடத்தவுள்ளன. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆய்வ ரங்கில், மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் உலகநாட் டுப் பாரதியியல் ஆய்வாளர்கள் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுத் தாள்களை வழங்கவுள்ள இப் பான்னாட்டு ஆய்வரங்கில், டாக் டர் சுதாசேஷய்யன், பேராசிரி யர் ய.மணிகண்டன் மற்றும் சொல்வேந்தர் சுகிசிவம் ஆகி யோரின் உரையரங்குகளும் இடம் பெறவுள்ளன. பாரதியாரின் பாடல்களில் பிரபலப் பாடகி மஹதி வழங்கும் இசை நிகழ்வும், பாரதியாரின் ஓவியங்கள் குறித்த கண்காட்சி யும் இந்நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாரதியாரின் எழுத்து வன்மை ஓங்கி நிற்கும் அவருடைய கட்டு ரைகள் மற்றும் கதைகளை மைய மிட்டு இந்தப் பன்னாட்டு ஆய்வ ரங்கு நடைபெறவுள்ளதென, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளு வன் தெரிவித்தார். இப்பன்னாட்டு ஆய்வரங்கின் ஒருங்கிணைப்பாளர்களாக, முனைவர் இரா.குறிஞ்சிவேந் தன், வானவில் கே.ரவி மற்றும் இலங்கையின் முனைவர் ஸ்ரீபிர சாந்தன் ஆகியோர் நிகழ்வுகளுக் கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஆய்வரங்கின் முதல்நாள் கட்டுரையாளர்களின் ஆய்வுக்கோவை வெளியிடப்பட வுள்ளது. மேலும் பன்னாட்டு ஆய்வரங்கிற்கான இலச்சினை வெளியிட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.