சென்னை, ஏப்.28- கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முமுவதி லும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசுத்துறை களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஊதி யத்தில் ஒரு நாள் தொகையை கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்கான நிதியுதவியாக அரசு கேட்டிடும் முன்னரே வழங்கிட முன்வந்து இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாக திகழ்ந்தார்கள். தமிழக முதல்வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பை மனதாரப் பாராட்டினார். தொடர்ந்து அரசு ஊழியர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மத்திய அரசிடம் கொரோனா நிவாரண நிதியை கேட்டுப்பெற தைரியமில்லாமல், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற ரீதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் உரிமைகளில் அவர்கள் போராடி பெற்ற சலுகை களில் அடுத்தடுத்து கை வைக்க ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையி லான காலத்திற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி மத்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பை ஒட்டி தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அக விலைப்படி உயர்வை ஜூலை 2021 வரை நிறுத்தியுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைத்து அரசு ஊழியர்களின் பணத்திலிருந்து சுமார் ரூ.15,000 கோடியை எந்தவித நியாயப்படுத்தலும் இன்றி பறித்துக் கொள்ள அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுநாள் வரை மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிவாரணத் தொகையை பற்றி அறிவிப்புகள் எதுவும் கொடுக்காத நிலையில் அதை பெறுவதற்காக குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுடன் சேர்ந்து குரலெழுப்பக்கூட முன் வராமல், ஈட்டிய விடுப்பின் 15 அல்லது 30 நாட்களை சரண்டர் செய்து தொகைபெறும் உரிமையை ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெறுவதை நிறுத்தியிருப்பதை வெட்கக்கேடு என்று சொல்லாமல் என்னவென்பது? இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2300 கோடி வரை பண இழப்பு ஏற்படும்.
இதற்கும் மேலாக தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஜிபிஎப் தொகையின் வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீத மாகக் குறைத்து அரசு ஊழியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பெறும் வட்டி விகி தத்தில் 0.8 சதவீதம் இழக்க நேரிடும்.
இன்னொரு போராட்டத்திற்கு தள்ளாதீர்!
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தங்கள் குடும்பத்தை விட்டு தொடர்ந்து உயிரைத் துச்சமென மதித்து கொரோனாவுடன் ஒரு பெரும் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் நிதி பறிப்பின்மூலம் முதுகில் குத்த நினைக்குமா னால் அரசு ஊழியர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக இன்னொரு போராட்டத்திற்கு தயாராக வேண்டியதிருக்கும். எனவே இத்தகைய அரசாணைகளை உடனே திரும்பப் பெற வேண்டும். இக்கட்டான இச்சூழ்நிலையில் அரசு ஊழியர்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களை வஞ்சிக்காமல் நிதியாதாரங்களுக்கு வேறுவழிகளைக் காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகி யோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.