tamilnadu

img

4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை நூறு நாள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச.10- கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஒன்றிய பகுதிகளில் 100 நாள் வேலை செய்த தொழி லாளர்களுக்கு நாலு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடன் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வழங்க கோரியும் கும்ப கோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சமீபத்தில் பெய்த கனமழை யால் வீடு இடிந்த அனைவருக்கும் நிவா ரணம் வழங்க கோரியும், சேதமடைந்த அனைத்து சாலைகளையும் உடனே சீர் செய்திடவும் கிராமப் புறங்களில் தேங்கியுள்ள மழை தண்ணீரை வெளி யேற்ற வேண்டும். தொகுப்பு வீடுகளை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டதிற்கு மாநிலக்குழு சி. நாகராஜன் தலைமை வகித்தார்.  விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை, தஞ்சை மாவட்டச் செயலாளர் பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் பி. ஜேசுதாஸ், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச்  செயலாளர் பழனிவேல், கும்ப கோணம் நகர செயலாளர் செந்தில் குமார், வி.தொ.ச ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.