சென்னை, அக். 18- அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2003ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிய மனம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் தற்போதுள்ள ஆசிரியர்கள் கடுமையான பணிச் சுமையோடு பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. எனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசி ரியர்களுக்கு பணி நிரவலில் முற்றிலும் விலக்கு அளித்து அரசாணை வெளியிட வேண்டும். பதவி உயர்வு வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியலை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் வலியுறுத்தி உள்ளார்.