சென்னை, ஆக.4- தேசிய நெடுஞ்சாலைகளில் விபத் தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைகளிலேயே அவசர சிகிச்சை மையம் துவங்கப்படவுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை பூவிருந்தவல்லி அருகே யுள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி யின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 7ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 194 மாண வர்கள் உள்ளிட்ட 2340 மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கி கவு ரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஈ.சி.ஆர் மற் றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை களில் வாகன விபத்து ஏற்பட்டால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளித்து காப்பாற்றும் வகை யில் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே அவரச சிகிச்சை மையம் திறக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூ ரில் இன்னும் ஓரிரு வாரங்களில் அவ சர சிகிச்சை மையம் துவக்கப்படும் என்றும் தெரிவித்தார்.