tamilnadu

சென்னையில் விரைவில் மருந்து உற்பத்தி பூங்கா துவக்கம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை,நவ.24 அதி நவீன மருந்து உற்பத்தி  பூங்கா சென்னையில் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினர். இதுகுறித்து அவர் கூறிய தாவது: கிங்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சென்னையில் கிங்ஸ் மருத்துவ மனையின் கிளையை அமைப்ப தற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.  தற்போது, தமிழக மருத்துவர்களுக்கு, கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பயிற்சி அளிக்கும் முறை துவங்கப்பட்டுள்ளது. முதலாவதாக, இத்திட்டம் நரம்பி யல் துறையில் துவங்கப்பட்டு ள்ளது. இத்துறையில், குணப்படுத்த முடியாத நோய்க ளுக்கு மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்து வர்களுடனான பேச்சுவார்த்தை, 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அவர்களுக்கான கோரிக்கைகள் குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். மருந்துகள், உபகரணங்கள் தயாரிக்கும், ‘மெடி பார்க் செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. அதன் மற்றொரு பிரிவை, சென்னை யில் தொடங்க, மருந்து தயாரிப்பாளர்கள் ஆர்வம் தெரி வித்துள்ளனர். முதல்வருடன் ஆலோசித்து, அதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்ப டும். ஓபிசி இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடிவு எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய ஓபிசி பிரிவின ருக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் அழுத்தம் தர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.