பழனி, ஜன.14- பொங்கலையொட்டி கோயம்புத்தூரிலி ருந்து பழனி வழியாக இராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை ஆண்டு முழுவதும் நாள்தோறும் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொங்கலையொட்டி கோயம்புத்தூரி லிருந்து இருந்து பழனி வழியாக இரா மேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்ப டுகிறது. கோயம்புத்தூரிலிருந்து இராமேஸ்வ ரத்திற்கு ஜனவரி 14, 16-ஆம் தேதியும், இராமேஸ்வரத்தில் இருந்து கோயம்புத்தூ ருக்கு ஜனவரி 15, 16- ஆம் தேதியும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் செவ்வா ய்க்கிழமை காலை கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் பகல் 12 மணிக்கு பழனியை வந்தடைந்தது.
இந்த சிறப்பு ரயிலை பழனி ரயில் உப யோகிப்போர் சங்கத்தினா், மக்கள் வர வேற்றனா். தொடர்ந்து இராமேஸ்வரத்திற்கு வழியனுப்பி வைத்தனா். இந்த ரயில் செவ்வாய் மாலை 6.45க்கு இராமேஸ்வரம் சென்றடைந்தது. புதன் காலை 8.40-க்கு புறப்பட்டு பகல் 2 மணிக்கு பழனியையும், மாலை 5.30 மணிக்கு கோயம்புத்தூரை யும் சென்றடையும். பொங்கலையொட்டி பழனி பக்தா்கள், பயணிகள் வசதிக்காக நான்கு நாட்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக்கி வருடம் முழுக்க நாள்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனா்.