tamilnadu

img

கொரோனாவை ஏமாற்ற முடியாது: அமைச்சர்

 சென்னை மார்ச் 29- ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூடும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறையை ஏமாற்றியதாக நினைத்து வெளியில் சுற்றி திரிவோர், கொரோனாவை ஏமாற்ற முடியாது என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாரணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாநில அவரச கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077மூலம் அரசுக்கு தெரிவிக்கலாம் என்றார்.