tamilnadu

img

400 இடங்களில் தொடர் போராட்டம்

மார்ச் 17-ல் திட்டமிட்டபடி நடைபெறும்

தமிழக மக்கள் ஒற்றுமை  மேடை அறிவிப்பு

சென்னை, மார்ச் 13- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்  பெற வலியுறுத்தி மார்ச் 17 அன்று தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திட்டமிட்டபடி 24 மணி நேர தொடர் இருப்புப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்துள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் செயற்பாட்டு குழு கூட்டம் அருட்தந்தை இருதயா அருட்கடல் தலைமையில் மார்ச் 14  வெள்ளியன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என்று அரசியல் கட்சி களும் அரசியல் சாரா அமைப்புகளும் பலவகையான போராட்டங்களை கடந்த மூன்று மாதங்களாக நடத்தி வருகின்றனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையும் மாபெரும் மனிதசங்கிலி இயக்கத்தையும் மகத்தான குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டை யும் நடத்தியது எனினும் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், என்.பி.ஆர் குறித்த சந்தேகங்களை எழுப்பி மாநில அரசு அனுப் பிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் பதில் வராததால் அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வியாழனன்று அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் இது பற்றி சட்ட மன்றத்தில் கேட்கப்பட்டதற்கு அப்படி ஏதும் சொல்லவில்லை என்று மறுத்துவிட்டார்.  முதல்வரும் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடைபெறு கின்றன என்று கூறியிருக்கிறார்.  மேலும்  மாநில அரசானது  இந்தப் பிரச்சனை  அனைத்து மக்களின்  குடியுரிமை பிரச்சனை என்று பார்ப்ப தற்கு பதிலாக  ஏதோ இஸ்லாமியர்களின் பிரச்சனை என்பதுபோல பாகுபடுத்தி  பார்க்கும்  போக்கை கடைபிடிக்கிறது.

இது நியாயமற்றது என்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சுட்டிக்காட்ட விரும்பு கிறது. ஆட்சியாளர்களின் இத்தகைய முன்னு க்குப் பின் முரணான பேச்சுக்களை மேடை யின் செயல்பாட்டுக் குழு வன்மையாக கண்டி க்கிறது. வறட்டுப் பிடிவாதத்தில் இருக்கும் அதிமுக அரசை வழிக்குக் கொண்டுவர அடுத்தகட்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டம் முடிவுசெய்தது. ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 24 மணிநேர தொடர்  இருப்பு போராட்டம் தலைநகர் சென்னை யிலும், மாவட்டங்கள் மற்றும் தாலுக்கா தலை நகர்களில் நடைபெறும். சுமார்  400 இடங் களில் நடக்கவிருக்கும் இந்த போராட்டத்தை அரசியல் கட்சிகளும் கட்சி சாரா அமைப்பு களும் மக்களும் ஆதரிக்க வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தின் இத்தனை ஊர் களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் வெகுமக்கள் திரள் கண்டாவது மாநில அரசு சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என நம்புகிறோம்.