tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடக்கம்

சென்னை,பிப்.11- தமிழ்நாட்டில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை,  மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல்  ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணையச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர், 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோரு டன், காணொலிக் காட்சி மூலம், ஆலோசனை மேற்கொண்டனர். 2 மணி நேரத்திற்கும்  மேலாக நீடித்த ஆலோசனையின்போது, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னெடுக்கும் விதமாக, வாக்குச்சாவடிகளை கண்டறியவும், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, விரைந்து தயாரித்து வெளி யிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பா ளர்களின் செலவீன கணக்குகளை விரைந்து சரிபார்த்து முடிக்கவும், மாநில தேர்தல்  ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தினார்.