tamilnadu

img

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஆணையர் தகவல்

சென்னை,ஜன.4- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறி விக்கப்படும் என மாநில  தேர்தல் ஆணையர் பழனி சாமி தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 6ஆம் தேதி பதவி யேற்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சென்னை கோயம் பேட்டில் மாநில தேர்தல்  ஆணைய அலுவலகத்தில் பழனிசாமி செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது,  வாக்கு எண்ணும் பணி நிறை வடைந்து, வெற்றிபெற்றவர் களுக்கு சான்று வழங்கப் பட்டு விட்டது” என்றார். போட்டியிட்டவர்களின் பெயர்கள் துணை வாக்கா ளர் பட்டியலில் நீக்கப்பட்டி ருந்ததால் 25 பதவியிடங்க ளுக்கு மட்டும் வாக்கு எண்  ணிக்கை நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக அவர் தெரி வித்தார். வாக்கு எண்ணும் பணி  அமைதியாகவும், நேர்மை யாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது என்றும்,  புகார்கள் தெரிவிக்கப்பட்ட போது உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  இதற்கு முன்னர் நடை பெற்ற தேர்தல்களைவிட இந்த தேர்தல் நேர்மையாக வும், பாரபட்சம் இல்லாமலும்  நடைபெற்றது எனவும், வாக்கு எண்ணும் நடைமுறை யில் அதிகாரிகளால் குளறு படிகள் ஏற்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் எனவும் மாநில தேர்தல்  ஆணையர் உறுதியளித்தார்.