tamilnadu

காவிரி ஆற்றங்கரையோரம் இருந்த 90 சத குப்பைகள் அகற்றம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

ஈரோடு, ஜூலை 26- காவிரி ஆற்றின் கரையோரம் குவிந்து கிடந்த குப்பைகளில் 90 சதவிகிதம் அகற்ற பட்டுள்ளது. மீதமுள்ள குப்பைகளை அகற்றி உரமாக்கும் பணிகள் 10 நாட்களில் துவங்கும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சேகரிக் கப்படும் குப்பைகள் அனைத்தும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள வைரா பாளையம் மற்றும் வெண்டிபாளையம் குப்பை கிடங்குகளில் கொட்டி வைக்கப் பட்டுள்ளது. இந்த குப்பைகளை அரைத்து உரமாக்கி காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் திட்டமிடப் பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் 19 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் அமைக்கப்பட்டுள் ளது. வைராபாளையம் மற்றும் வெண்டிபா ளையம் பகுதியில் குவிந்துள்ள குப்பை களை உரமாக்க முதல் கட்டமாக வைரா பாளையத்தில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் குப்பைகளை அரைத்து உரமாக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு அங்கு உரமாக்கும் பணி நடந்து வந்தது.

இதனால், காவிரி ஆற்றின் கரையோரத்தில் இருந்த 90 சதவிகித குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது கொரோனா ஊரடங்கால் குப்பை அரைக்கும் பணிகள் நிறுத்தப் பட்டுள்ளது. 90 சதவிகித குப்பைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் 10 சதவிகித குப்பைகளை அகற்றி உரமாக் கும் பணிகள் இன்னும் 10 நாட்களில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.