திருநெல்வேலி/தூத்துக்குடி/நாகர்கோவில், ஜுன் 10- இந்திய வளங்களை ஒவ்வொன் றாக கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கி வந்த மோடி அரசு கோவிட் பின்ன ணியில் விவசாயத்தையும் கார்ப்ப ரேட்டுகளின் கொள்ளைக்கு திறந்து விடும் வகையில் கொண்டுவந்துள்ள அவசர சட்டங்களின் நகல்களை எரித்து விவசாயிகள் புதனன்று போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 இல் சில திருத்தங்கள் செய்து, கார்ப்பரேட் நிறுவனங்களி டம் விவசாயத்தை ஒப்படைக்கும் அவசர சட்டங்களை மோடி அரசு திணித்துள்ளது. வேளாண் உற்பத் திப் பொருட்கள் வணிக ஊக்கு விப்பு அவசர சட்டம் 2020, விவசாயி களுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகியவற்றின் மூலம் விவசா யத்துறை மீதான அரசின் பொறுப் பைத் துறந்து கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்கு திறந்து விட்டுள் ளது. இந்த சட்டங்கள் இடைத்தர கர்களுக்கு ஆதாயம் அளிப்பதாக- பதுக்கலுக்கும் செயற்கையாக உண வுப்பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுப்பதாக உள்ளது என நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களில் புதன்கிழமை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பும் சங்கரன்கோ வில், தென்காசி புதிய பேருந்து நிலை யம் அருகிலும் போராட்டம் நடை பெற்றது. நெல்லையில் நடைபெற்ற போ ராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுரு தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடலைராஜ், பாளை தாலுகா செயலாளர் வர குணன், பாப்பாகுடி ஒன்றியச் செய லாளர் மாரிச்செல்வம், விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல் லத்துரை, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் நட ராஜன், துணைச் செயலாளர் கருப்ப சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சீனி. பாண்டி உட்பட திரளான விவசாயி கள் பங்கேற்றனர்.
தென்காசி
தென்காசியில் மாவட்ட துணைத் தலைவர் வேலுமயில் தலைமை வகித் தார். துணைத் தலைவர் ராமகிருஷ் ணன் துணைச் செயலாளர் கண்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி, மாதர் சங்க நிர்வாகி தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போ ராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாவட்டச் செயலாளர் கே. பி.ஆறுமுகம், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், நம்பிரா ஜன், ரவிச்சந்திரன், ஓட்டப்பிடாரம் முரளி, கருங்குளம் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருத்தச் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.ரவி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜே.சைமன் சைலஸ், நிர்வாகிகள் என்.முரு கேசன், ஜே.ஆறுமுகம் பிள்ளை, எஸ். சிவகோபன், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாநில துணை தலை வர் உஷா பாசி, மாவட்ட செயலாளர் எம்.ரெகுபதி உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். இதுபோல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் நடந்த அவசர சட்ட நகல் எரிப்பு போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார், பொருளாளர் ஜே.சதீஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் டெல்பின், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனை வரும் கைது செய்யப்பட்டனர்.