சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், அதனை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறி வித்தது. ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்கு வதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது.