tamilnadu

img

விராலிமலை ஒன்றிய மக்களின் வாழ்வாதாரத்தை வென்றெடுப்போம் கோரிக்கை மாநாடு அறைகூவி அழைக்கிறது

கோரிக்கை மாநாட்ட விளக்கி கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலளர் சா.தோ.அருணோதன் உள்ளிட்டோர் மக்களைச் சந்தித்து துண்டுப்பிரசுரம் விநியோகிக்கின்றனர்.

45 ஊராட்சிகளைக் கொண்ட விராலிமலை ஒன்றியம் கிழக்கு மேற்காக 65 கிலோ மீட்டரும், தெற்கு வடக்காக 40 கிலோ மீட்டர் என பரந்து விரிந்த பகுதியாக உள்ளது.  மாவட்டத்தின் வறட்சி மிகுந்த பகுதிகளில் விராலிமலை முதன்மையான ஒன்றியமாக திகழ்கிறது. தொடர்ந்து பருவமழை பொய்த்து வரு வதால் நிலத்தடி நீர் படிப்படியாகக் குறைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்குக்கூட அவதிப்படு கின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பல இடங்களில் இடிந்து விடும் நிலையில் உள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய்களில் தண்ணீரைப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடத் தப்படாமல் உள்ளாட்சி நிர்வாகம் முற்றிலு மாக முடங்கிக்கிடக்கிறது. இதனால், மக் கள் தங்களின் குறைகளைச் சொல்வ தற்குக்கூட நாதியற்றுக் கிடக்கின்றனர். இந்தப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்பட்டு பல ஆண்டு கள் ஆகின்றன. இத்திட்டத்தின் மூலமாக வும் முறையான குடிநீர் வினியோகம் இல்லை. தரமற்ற குழாய்களால் ஆங் காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது. இந்தப் பணிகளைக் கண் காணிப்பதற்கும் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. விவசாயம் வெகுவாகக் குறைந்து விட்டதால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். நூறு நாள் வேலைத் திட்டம் எந்த ஊராட்சி யிலும் முறையாகச் செயல்படுத்தப்பட வில்லை. சுழற்சி அடிப்படையில் என்று கூறி வருடத்திற்கு 100 நாள் வேலை என் பதை வெறும் 30, 40 நாட்களாக சுருங்கி விட்டது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணப் பொருட்களும், மரங் கள் மற்றும் விவசாயத்திற்கான இழப் பீட்டுத் தொகை முறையாக வழங்கப்பட வில்லை. மணல் குவாரி என்கிற பெயரில் வில்லாரோடை, மதானைப்பட்டி, கத்த லூர், ஆவூர் பகுதிகளில் அரசியல் ஆதிக் கத்தின் துணையோடு மணல்கொள்ளை நடைபெறுகிறது. கூட்டுறவு நிறு வனங்கள் ஆளுங்கட்சியினரின், ஆதிக்க சக்திகளின் மேய்ச்சல் காடாக மாற்றப் பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் நியாய விலைக் கடைகள் மற்றும் பகுதிநேரக் கடைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப் படாமல் உள்ளது. ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகளுக்கு பல வற்றிற்கு 1984 -லிருந்தே குடிமனைப் பட்டா வழங்கப்பட வில்லை. ஒன்றியத்தில் 25-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் பல தலைமுறைகளாக குடி யிருந்துவரும் ஏழைகளுக்கு இதுநாள் வரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை. 25-க்கும் மேற்பட்ட இனாம் கிராமங்கள் பலவற்றில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் உழுதவனுக்கு பட்டா கிடைக்க வில்லை. அவர்களின் நிலங்கள் மோசடி யாக பிடுங்கப்படுகின்றன. குறிப்பாக கொடும்பாவூர் மக்களுக்கு அரசியல் தலையீட்டின் காரணமாக வருவாய்த் துறை சட்டத்தின் கீழ் தீர்வு செய்யப்பட வில்லை. இதன்மீது வருவாய் ஆணைய மும், நில நிர்வாக ஆணையமும் உரிய விசாரணை நடத்தி அந்த ஏழை விவசாயி களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தொண்டைமான் நல்லூர் சத்திரம் இனாம் கிராமத்தில் சுமார் 1500 ஏக்கர் நிலத்திற்கு அனைத்துவிதமான குடிவார உரிமைகளும் சாகுபடியாளர்களிடம் உள்ளன. ஆனால், விவசாயிகளுக்குத் தெரியாமலேயே மோசடியாக சத்திரத் திற்கு பட்டா போடப்பட்டது. இதை எதிர்த்து அரசே நடத்திய வழக்கில் சட்டத்தின்வழி  தீர்வு செய்திட வேண்டுமென தீர்ப்பளிக்கப் பட்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. நீதி மன்றத் தீர்ப்பின்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பெருவாரியான கிராமச் சாலைகள் முழுமையாக பழுதடைந்துள்ளன. அங் கொன்றும் இங்கொன்றுமாகப் போடப் படும் சாலைகளும் தரமற்றதாக உள்ளது. கிராமச் சாலைகளை செப்பனிடுவதோடு அனைத்துக் கிராமங்களுக்கும் போக்கு வரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். ஏரி, குளங்கள், ஊரணிகள் மீதான ஆக்கி ரமிப்புகள் அகற்ற வேண்டும்.  குடிமக்க ளுக்கே தெரியாமல் நடைபெறும் குடிமரா மத்து ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை பார்த்த விராலிமலை மற்றும் மாத்தூர் பகுதிகளில் இயங்கி வந்த தனி யார் தொழிற்சாலைகள் கடந்த சில ஆண்டு களாக மூடப்பட்டுக் கிடக்கிறது. அவற்றை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ள கறம்பக் காடு பகுதியில் அரசு தொழிற்சாலைகளை நிறுவி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஒன்றியத்தின் குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல்வேறு கிராமங்களுக்கு விராலிமலையை மையப்படுத்தி போக்கு வரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். காக்காகுடி ஆற்றிலும், நம்பம்பட்டி ராஜாளிப்பட்டியின் காட்டாற்றிலும் தடுப்ப ணைகள் கட்டப்பட வேண்டும். தொண்டை மான் நல்லூர் மற்றும் கவரப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்ப தோடு, கொடும்பாவூர் துணை நிலை யத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும்.  வருவாய் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சட்டமன்றத் தொகுதி யின் தலைநகரமாக விராலிமலை உள் ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கா ளர்களைக் கொண்டதோடு, ஒரு நகராட்சி அளவிற்கு கட்டுமானங்கள், வீதிகளுடன் கூடிய குடியிருப்புகள், போக்குவரத்தின் மையப்பகுதி என பல்வேறு அம்சங்கள் இருந்தும் இன்னும் பேரூராட்சியாகக்கூட தரம் உயர்த்தப்படவில்லை. குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கோ, சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கோ, சுகாதார வசதிகளைச் செய்துதருவ தற்கோ ஊராட்சி அளவிலான ஊழியர் களைக் கொண்டு நிறைவேற்றுவது மிகுந்த சிரமாக உள்ளது. எனவே, விராலி மலை ஊராட்சியை உடனடியாக பேரூ ராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.  விராலிமலையில் உள்ள குளங்கள், ஊரணிகள் ஆக்கிரமிப்புகளால் அழிக் கப்பட்டு வருகின்றன. பெரும்பாலன பேருந்துகள் புறவழிச்சாலையிலேயே சென்றுவிடுகின்றன. ஊருக்குள் வருவ தில்லை. கடைவீதி சாலை குண்டுங்குழியு மாகக் கிடக்கின்றன. தெருவிளக்குகள் தூங்கிக்கொண்டு இருக்கின்றன இத்த கைய அவலங்கள் போக்கப்பட வேண் டும். காமராஜர் நகர் ரவுண்டானா, கடை வீதி பூக்கடைப் பகுதி, மேல்நிலைப்பள்ளி எதிரில் ஆகிய பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட வேண் டும். நகரத்தில் பலவகையாக புறம் போக்குகளில் குடியிருந்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு வகை மாற்றம் செய்து உடனடியாக வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை புல எண்கள் வாரியாக அறநிலையத் துறை திறந்த பட்டியலை வெளியிட வேண்டும். கோவில் நிலங்களை மோசடி யாக பட்டா போட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். மலையை உடைத்து பாதை அமைப்பதைத் தவிர்த்து ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும். மயில்களின் சரணாலயமாகத் திகழ்ந்த முருகனை சுற்றியுள்ள மலை அடிவாரம் கட்டிடங்களால் நிரம்பி வழி கிறது. இதனால், மயில்களின் எண் ணிக்கை நாளுக்குநாள் அருகி வரு கிறது. அத்துமீறி இப்படி கட்டிடங்கள் எழுப்புவதற்கு அனுமதி தந்தது யார்? தொல்லியல் துறையா? அறநிலையத் துறையா? தமிழ்நாடு அரசா? என மக்க ளுக்கு பதில் அளித்திட வேண்டும். விராலிமலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்திட, வேலை வாய்ப்பு களை உருவாக்கிட, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத் திட, தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எடுத்துச் சென்று கோரிக்கைகளை வென்றெடுத்து வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் சார்பில் கோரிக்கை மாநாடு செவ்வாயன்று (15.10.2019) விராலிமலை யில் நடைபெறுகிறது. இந்த மாநாடு வெற்றிபெறும் வகையில் மக்கள் அணி திரள வேண்டுமென அறைகூவி அழைக்கி றோம்.  அருணோதயன், ஒன்றியச் செயலாளர், விராலிமலை ஒன்றியம்