பொன்னமராவதி, பிப்.2- புதுக்கோட்டை பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் உள்ள வாரச் சந்தை வாரம் இருமுறை கூடுகிறது. சுற்று வட்டார 42 கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் இந்த சந்தையில் காய்கறி உள்ளிட்ட வற்றை வாங்குவதற்கும் விற்பதற்கும் கூடு கின்றனர். இந்த வாரச்சந்தையின் மையப் பகுதிக்குள் ஏற்கனவே இருந்த மதுக்கடை மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்த காரணத்தினால் சிபிஎம் மற்றும் பொது மக்களின் போராட்டத்தின் காரணமாக அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில் பிப் 3ஆம் தேதி பொது மக்களையும் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அறி வித்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை பொன்ன மராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரத்திற் குள் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலந்து கொள்ளும் சமாதான கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்ன மராவதி வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து சிபிஎம் சார்பில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎம் பொன்னமரா வதி ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தெரி வித்துள்ளார். இந்த கூட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செய லாளர் என்.பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் குமார், ராமசாமி, திராவிடர் கழக ஆசைத்தம்பி, மக்கள் பாதை ஞானசேகர், மாணவர் கூட்டமைப்பு ஹைதர் அலி, அப் பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.