districts

img

ஏரியை தூர்வார அதிகாரிகள் உறுதி  சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

 தஞ்சாவூர், ஆக.11-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம், முதல்சேரி ஊராட்சிக்குட்பட்ட பூலாங்கண்ணி ஏரி தூர்வா ரப்படாமல் இருப்பதை கண்டித்தும், ஏரிக்கு தண்ணீர்  வரும், நைனான்குப்பம் வாய்க்காலைத் தூர்வாரி சுத்தப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சார்பில் கண்டன ஆர்ப்  பாட்டம் வியாழனன்று காலை நடைபெறுவதாக இருந்தது.  இதையொட்டி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஞானசூரியன், முருக. சரவணன், மோரிஸ் அண்ணாதுரை, சுவாமிநாதன், சுந்தர பாண்டியன், வி.ச ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வன், கிளைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பாண்டியன், சேதுகுமார் மற்றும் கட்சியினர் திரண்டனர்.  இதையடுத்து, அங்கு வந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இளங்கண்ணன், சுரேந்தர் மோகன் போராட்டக் குழுவினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட காலமாக பூலாங்கண்ணி ஏரி தூர்வாரப்படா மல் உள்ளது. அந்த ஏரியை தூர்வாருவதற்காக நிதி ஒதுக்  கப்பட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே  ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46 லட்சம் என்னவாயிற்று? பணிகள் ஏன் தொடங்கப்படவில்லை என பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து பணிகள் விரைவில் தொடங்கப்படும். படித்துறை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து, சிபிஎம் சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.