பொன்னமராவதி, மே 24- புதுக்கோட்டை பொன்னமரா வதி வட்டாட்சியர் அலுவல கத்தில் வருவாய்த்துறை அலு வலர் சங்க வட்ட கிளை சார்பில் தற்காலிக துணை வட்டாட்சியர் பட்டியலை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம், மாவட்ட இணைச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. வட்ட தலைவர் துரை முன்னிலை வகித்தார். தனி வட்டாட்சியர் சங்கரகாமேஸ் வரன், துணை வட்டாட்சியர் பிர காஷ், வட்ட வழங்கல் அலுவலர் ருக்குமணி, வட்டச் செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.