tamilnadu

img

‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜன.31- 4-வது புதக்கோட்டை புத்தகத் திருவிழாவை யொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிப்.14 முதல் 23- வரை புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடை பெறுகிறது. புத்தகத் திரு விழாவின் அவசியத்தை பள்ளி, கல்லூரி மாணவர்க ளிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ‘புதுக் கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. குறிப்பிட்ட பாட வேளையில் பாடப்புத்த கத்தைத் தாண்டி கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட புத்தகங்களை மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து வாசித்த னர். புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற வாசிப்பு இயக்கத்தி ற்கு மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ்.ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். வாசிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார் சிறப்புரையாற்றினார்.  புத்தகத் திருவிழாவின் நோக்கம் குறித்து கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார். புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர்கள் அ.மண வாளன், க.சதாசிவம், ம.வீர முத்து, எம்.எஸ்.சுவாமிநா தன் ஆராய்ச்சி நிறுவன முது நிலை விஞ்ஞானி ஆர்.ராஜ் குமார் மற்றும் ராசி.பன்னீர் செல்வம், பேரா.விஸ்வநா தன், சு.மதியழகன், புதுகை செல்வா, புதுகை புதல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். முன்னதாக தலைமை ஆசிரியர் ஏ.பெட்லாராணி வரவேற்க, ஆசிரியர் கமலம் நன்றி கூறினார்.