tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை, ஜூன் 5-பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய வேலை உறுதித்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவு பொய்யாமொழி மற்றும் திட்ட உதவி இயக்குநர் (ஊதிய வேலைவாய்ப்பு திட்டம்) பன்னீர்செல்வம் ஆகியோரும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சித்துறை முகமை திட்ட இயக்குநர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.