tamilnadu

img

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 10- புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிபிஐ(எம்எல்) கட்சி மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றி யச் செயலாளர் வி.ரெத்தினவேல், சிபிஐ ஒன்றியச் செயலா ளர் உ.அரசப்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சிபிஐ(எம்எல்) ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல், வளத்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றியத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்ள் நடைபெற்றன. கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், சிபிஐ(எம்எல்) ஒன்றியச் செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தர மூர்த்தி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், சிபிஐ ஒன்றியச் செயலாளர் சொர்ணக்குமார், சிபிஐ(எம்எல்) ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டேர் பங்கேற்றனர். அரிமளம் ஒன்றி யத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன், திருமயம் ஒன்றி யத்தில் ஒன்றியச் செயலாளர் சி.ஜீவானந்தம், பொன்ன மராவதி ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பகுருதீன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஏ.எல்.ராசு உள்ளிடோர் பங்கேற்றனர். குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலா ளர் கே.தங்கவேல், அன்னவாசல் ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, அறந்தாங்கி ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, ஆவுடை யார்கோவில் ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ்,  புதுக்கோட்டை ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி, விராலிமலை ஒன்றியத்தில் ஒன்றியச் செய லாளர் சா.தொ.அருணோதயன், மணமேல்குடி ஒன்றி யத்தில ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி 
சிபிஎம் சார்பில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 13 இடங்களிலும், சிபிஐ சார்பில் 6 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் சார்பில் பொன்னமராவதி இந்திரா நகரில் கட்சி ஒன்றிய செயலாளர் என்.பகுருதீன், பேருந்து நிலையம் முன்பாக இரண்டு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முறையே ஒன்றியக்குழு உறுப்பினர் கே.குமார், சாலையோர வியாபாரிகள் சங்க கட்சி பொறுப்பாளர் எஸ்.கண்ணன், எம்ஜிஆர் நகரில் லட்சுமி, பாண்டிமான் கோவில் தெருவில் ஒன்றிய குழு உறுப்பி னர் மாயழகு, டாக்சி மார்க்கெட்டில் பாஸ்கர், அண்ணா நகரில் ஒன்றிய குழு உறுப்பினர் சிங்காரம், வேகுப்பட்டி ஏனமேட்டில் மதுமிதா, உசிலம்பட்டியில் அழகு, திருக்களம்பூரில் ஒன்றிய குழு உறுப்பினர் சாத்தையா, உடையாம்பட்டியில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசாமி, அரசமலையில் ஒன்றிய குழு உறுப்பினர் பிச்சை, காரை யூரில் ஒன்றிய குழு உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சிபிஐ சார்பில் பொன்னமராவதி பேருந்து நிலை யத்தில் மாநில குழு உறுப்பினர் ஏனாதி ராசு, நெருஞ்சி குடியில் பா.செல்வம், உடையாம்பட்டி வெள்ளைக்கன்னு, இந்திரா நகரில் ராசு, கருகபூலாம்பட்டியில் தேவி, அரசமலை கணேசபுரத்தில் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை நகரம்
நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். நாகை நகரச் செயலாளர்(பொ)  சு.மணி, சி.பி.ஐ. நகரப் பொறுப்பாளர் கே.என்.சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான வி.மாரிமுத்து, சி.பி.ஐ. சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினர். சி.பி.எம். சார்பில் சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.முனி யாண்டி, எம்.குருசாமி, டி.தினேஷ்பிரபு, எம்.பி.குண சேகரன், வி.ராமலிங்கம், கே.ராமதாஸ், எஸ்.விஜயகுமார், ஜி.ராஜேஸ்வரி, ஆர்.நாகேஸ்வரி, கா.மணியன், கே.ரவி,  சி.பி.ஐ. சார்பில் நாகை மாவட்டச் செயலாளர் ஏ.சீனிவா சன், ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.பாண்டியன், மாவட்டப் பொருளாளர் வி.ராமலிங்கம், மாவட்ட நிர்வா கக்குழு உறுப்பினர் ஏ.பி.தமீமுன்சாரி உளிட்டோர் பங்கேற்றனர். நாகை ஒன்றியம், சிக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, சி.பி.ஐ. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.சரபோஜி ஆகி யோர் த;லைமை வகித்தனர். நாகைமாலி கோரிக்கை களை விளக்கிச் சிறப்புரையாற்றினார். சி.பி.எம். சார்பில் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணி யன், கே.செந்தில்குமார், என்.வடிவேல், ஏ.கே.குமார், கே. மாரிமுத்து, சி.பி.ஐ. சார்பில் ஒன்றியத் துணைச் செயலாளர் ஆர்.செல்லத்துரை, ஒன்றியப் பொருளாளர் ஒய்.சேவியர், எம்.சுப்பிரமணியன், கே.கல்யாணசுந்தரம் கலந்து கொண்டனர்.