குடவாசல், ஜூன் 9- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத் திற்கும் மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். ரேஷன் உணவு பொருட்கள் ஊழல் இன்றியும் எடை குறையாமலும் முறை யாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து தின ஊதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசி னார். மாவட்ட குழு உறுப்பினர் கே.கைலாசம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.அண்ணாதுரை, கு.முனியாண்டி, வி. பூசாந்திரம், ஆர்.சுமதி, டி.ஜான் கென்னடி, நகர செயலாளர் சி.டி.ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் கடை வீதி மற்றும் கொக்கலாடி, சாரநத்தம், மாணவூர் என 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் என்.பாலையா, ஆர். ஜெ.நடராஜன், கருப்பையன், காமராஜ், கே.கலியபெரு மாள், சந்திரோதயம், நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடவாசல் விபிசிந்தன் பேருந்து நிலையம் அருகே இடதுசாரி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கி னார். சிபிஐ ஒன்றிய செயலாளர் ஏ.சுப்ரவேலு முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பால சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எப்.கொரக்கோரியா, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் டி.ஜி.சேகர், கே.ராமதாஸ், எஸ்.கிருஸ்வநாதன், சிபிஜ நிர்வாக குழு உறுப்பினர் கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நகர செயலாளர் வீ.கலைச்செல் வன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர் பெரு மன்ற மாநில தலைவர் மௌன குணசேகரன், இடதுசாரி கட்சிகளின் மாவட்ட நகர தலைவர்கள் ஆர்ஜி ரத்தினகுமார், டிசந்திரா, ஜிமீனாம்பிகை, ஆர் தாமோதரன், ஏ பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடபாதிமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எம் திருஞானம் தலைமை வகித்தார். சிபிஐ சிபிஎம் மாவட்ட ஒன்றிய தலைவர்கள் வி பாலு, ஏ தங்கவேலு, வி எம்பக்கிரிசாமி, டி மாரியப்பன், என் மாரியப்பன், வி திருஞானசம்பந்தம், செல்வராஜ். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டூர் இருள்நீக்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் எல். சண்முகவேலு தலைமை வகித்தார். மூத்த சிபிஎம் தலைவர் எஸ் தங்கராஜ், சிபிஐ சிபிஎம் தலைவர்கள் ஜெ.குமார், என்எம் சண்முகசுந்தரம், டி ராஜா, ஜி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், சி.பி.ஐ நகர செயலாளர் எம்.முருகேசன் தலைமை வகித்தனர். சி.பி.எம் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் பாலு முன்னிலை வகித்தனர். சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு, மாவட்டக்குழு டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், எம்.பி.கே.பாண்டியன், கே.பி.ஜோதிபாசு, சி.பி.ஐ சார்பில் தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன், மாவட்ட நிர்வா கக்குழு பி.வி.சந்திரராமன், தமயந்தி, முத்துகுமார் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி வடக்கில் கச்சனம் கடைதெருவில் சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகா னந்தம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோமல், பொன்னிரை, ஆலத்தம்பாடி உள்ளிட்ட இடங்களி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி தெற்கில் நெடும்பலம் கடைத்தெருவில் சி.பி.எம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கே.வேலவன், சி.பி.ஐ ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் கே.விஜயா தலைமையில் நடைபெற்றது. நகரக்குழு உறுப்பினர் எஸ்.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போன்று பாமணி, கொருக்கை, கொக்காலடி, சேகல், கட்டிமேடு உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டக்குழு சார்பில் ராமகிருஷ்ணபாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர், சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி, சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் தேசிகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா பேசினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், லெனின், பகுதிகுழு செயலாளர்கள் கார்த்திகேயன், வேலுச்சாமி, சிவக்குமார் உள்ளிட்டோர் மற்றும் வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர். சிபிஎம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் சமயபுரம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துவாக்குடி அண்ணா வளைவு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், மல்லிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் மாரியம்மாள், சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜான்சன் ராஜ்குமரன், சங்கிலிமுத்து, குருநாதன், முருகே சன், ராதாகிருஷ்ணன், தங்கவேல் கலந்து கொண்டனர்.
துறையூர்
துறையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காசிராஜன், சங்கிலிதுரை, தங்கவேல், கமலம், பொன்னுச்சாமி, சிபிஐ மாவட்டக்குழு கணேசன், ஒன்றிய செயலாளர் சேகர், செல்வம் கலந்து கொண்டனர். உப்பிலியபுரம் அண்ணாசிலை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் முத்துக் குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிசாமி துவக்கி வைத்தார். சிபிஐ ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிர மணியன், ராமசாமி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், மங்கள்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்குமார் கலந்து கொண்டனர். மருங்காபுரி தாலுகா பாலக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, முருகேசன், நாகராஜன், பழனிசாமி, கிளை செயலாளர்கள் லூக்காஸ், சிபிஐ வெள்ளைக்கண்ணு, பாலு, இளையராஜா கலந்து கொண்டனர்.
மணப்பாறை
மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் ராஜகோபால், சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், சீனிவாசன், சுரேஷ், தங்கராஜ், சிபிஐ நகர செயலாளர் ஜனசக்தி உசேன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரகமானுதிஷா, நல்லுசாமி, வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நவமணி, சூளியாப்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் துளசிவேல் கலந்து கொண்டனர். தொட்டியம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன், வேதமணி, ஜெகநாதன், பெரியசாமி, தேவராஜன், சிபிஐ ஒன்றிய செயலாளர் சதீஷ், நடராஜன், தர்மலிங்கம் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு என்.செல்ல துரை, சிபிஐ மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு பி.ரமேஷ், எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, எஸ்.பி.டி.ராஜாங்கம், பி.கிருஷ்ண சாமி, சின்னசாமி, ஆர்.முருகேசன், சி.சண்முகம், ரெங்க நாதன், சரவணன், பன்னீர்செல்வம், பி.ரெங்கராஜ், செல்ல துரை, வரதராஜ், சீனிவாசன் மற்றும் சிபிஐ சார்பில் ராஜேந்திரன், தியாகராஜன், கலைச்செல்வன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
செம்பனார்கோவில்
நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் சிபிஎம் சார்பில் வட்டக்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசையன், ஏ.ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், பஷீர் அகமது, வில்லியம், குணசேகர் ஆகியோர் உரையாற்றினர். மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் சி.மேகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன், வட்டக்குழு உறுப்பினர்கள் த.ராயர், கோவிந்தசாமி, மணி உள்ளிட்டோர் உரையாற்றினர்.குத்தாலம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் உரையாற்றினார்.
சீர்காழி
நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு, வட்டச் செயலாளருமான சி.வி.ஆர்.ஜீவா னந்தம் தலைமையிலும், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி.வீரராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் சார்பில் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.வி.சிங்காரவேலு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். வட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.நீலமேகம், பி.விஜய், சி.லட்சுமணன், மூத்த தோழர்கள் கே.ஆர்.பெருமாள், ஆர்.எஸ்.பன்னீர்செல்வம், மாதர் சங்கம் சார்பில் அமுதா உள்ளிட்டோர் உரையாற்றினர். சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பொருளாளர் எஸ்.சுந்தரய்யா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே.வரத ராஜன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் வி.நீதிசோழன், இ.மா.தே.ச .ஒன்றிய செயலாளர் பி.தேவகி. அ.இ.இ. பெ.ம. ஒன்றிய செயலாளர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.