ஈரோடு, பிப். 13- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண் டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் வியாழனன்று ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண் டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ் மகாலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர் மணிபாரதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மேலும், சிபிஐ மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரசன்னா, சகாதேவன் மற்றும் நகர குழு உறுப்பினர்கள் உட்பட பெரும் திரளானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.