கோவை, ஜுன் 1 - விவசாயம், குடிசை, நெசவு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் மானிய மின் திட்டத்தை சீர் குலைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய மின் ஊழியர்கள் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயம், குடிசை, நெசவு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் மானிய மின்திட்டத்தை சீர்கு லைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மாநில மின் வாரியத்தை பிரிக்காதே, மின்விநி யோகத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே, மாநில அரசின் உரி மைகளை பறிக்காதே, மின்சார சட்ட த்திருத்தம் 2020 மசோதாவை திரும்பபெறு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்த அகில இந்திய மின் ஊழியர்கள் சங்கம் அறைகூவல் விடுத்தது.
இதன்ஒருபகுதியாக கோவை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற் பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். முன்னதாக அனைத்து மின்வாரிய கிளை அலுவலகம் முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் கண்டன எதிர்ப்பை தெரிவித்தும் கோரிக்கை அட்டை அணிந்தும், முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மின்வாரிய கூட் டமைப்பின் மண்டல செய லாளர் மதுசூதனன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலை வர்களும் பங்கேற்றனர். ஈரோடு இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.