மின் வினியோகத்தை தனியாருக்கு கொடுக்கக் கூடாது, மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 1)
தமிழகம் முழுவதும் மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலை மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை தாங்கினர்.
*****************
வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 2 நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கே .வெங்கட்டையா தலைமை தாங்கினார். இதில் சிஐடியு செயலாளர் வெங்கடேசன், தொமுச செயலாளர் கே .தேசிங், கணக்காயர் கள தொழிலாளர் சங்கம் செயலாளர் கோதண்டம், இன்ஜினியர் சங்கம் செயலாளர் சுகுமார், பொறியாளர் கழகம் செயலாளர் ஆனந்தன், இன்ஜினியர் யூனியன் செயலாளர் விநாயகம், ஐக்கிய சங்கம் நிர்வாகி ஜான், தமிழ்நாடு தொமுச தலைவர் ராஜா, பொறியாளர் அமைப்பு தலைவர் சண்முகம், தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.