புதுக்கோட்டை, பிப்.17- புதுக்கோட்டை மாவட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சிறப்புப் பேரவைக்கூட்டம் திங்கள் கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் எம்.ஜியாவு தீன் தலைமை வகித்தார். பேரவையில் மாநில பொருளாளர் வி.குப்புசாமி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவராக கே.ரெத்தினவேல், செயலா ளராக க.சிவக்குமார், பொருளாளராக எஸ்.கார்த்திக்கேயன், துணைத் தலைவர்களாக எம்.பால்ராஜ், பி. கருப்பையா, துணைச் செயலாளர்க ளாக கே.சாகுல்ஹமீது, வி.எஸ்.ஆரோக்கியசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மோட்டார் தொழிலை சீரழிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். டேல்கேட் என்ற பெயரில் அநியாய கொள்ளை வசூலை திரும்பப்பெற வேண்டும். மோட்டார் தொழில் உள்ளிட்ட முறைசாரா தொழி லாளர் நல வாரியத்தை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.