அறந்தாங்கி: புதுக்கோட்டை துணை இயக்குநர் தொழுநோய் அலுவலகத்தில் மாவட்ட நலக் கல்வியாளராக பணியாற்றி வரும் ஜீ.வெங்கட்ராமனுக்கு, அவரது பணிகளை பாராட்டி குடியரசு தின விழாவில் ஆட்சியர் உமாமகேஸ்வரி நற்சான்றிதழ் வழங்கினார். ஜீவிக்கு, தமிழ்நாடு சுகாதார துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் பாராட்டினர். இதே போல் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மாணவியர் விடுதியில் சிறப்பாக பணியாற்றிய விடுதி காப்பாளர் சந்தானலெட்சுமிக்கு நற்சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.