அறந்தாங்கி, ஜன.28 - புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலு வலகத்தோடு இணைந்து சிறப்பாக பணி யாற்றியதற்காக புதுக்கோட்டை மாவட்ட தொழுநோய் திட்ட நல கல்வியாளர் ஜீவி (எ) வெங்கட்ராமனுக்கு நற்சான்றிதழை புதுக் கோட்டையில் நடந்த 73 ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவ லர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சான்றிதழ் பெற்ற ஜீவிக்கு தமிழ்நாடு பொது சுகாதார அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரி வித்தனர்.