tamilnadu

img

வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமானார்!

வால்பாறை,ஜூன் 21- வால்பாறை தொகுதி எம்.எ.ஏ அமுல் கந்தசாமி(60) உடல்நலக்குறைவால் காலமானார்.
கோவையைச் சேர்ந்த அமுல் கந்தசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் அமுல் கந்தசாமி இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான அன்னூரில் உடல் இன்றே தகனம் செய்யப்படுகிறது