அறந்தாங்கி, அக்.1- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக உலக தொழுநோய் ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ந.ஜீவரெத்தினம் வரவேற்றார். புதுக்கோட்டை தொழுநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சிவகாமி, தொழுநோய் பற்றி அறிகுறிகள் மருத்துவ முறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மணிகண்டன், ஜெகன் நலக்கல்வி மேலாளர் ஜி.வெங்கட்ராமன், மருத்துவ மேற்பார்வையாளர் மாரிக்குமார் மற்றும் ஹரிஹரன், விஸ்வநாதன், தர்மலிங்கம், வீரக்குமார் மற்றும் பேராசிரியர்கள் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வ தொ ண்டர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர் நிறை வாக தமிழ்துறை பேராசிரியர் பழனிதுரை நன்றி கூறினார்.