tamilnadu

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, செப்.19-  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக.2019-க்கான இக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை யில் நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள், எரிவாயு உருளை (சிலிண்டர்) நிரப்புவதில்  பதிவு செய்வதில் உள்ள சிர மங்கள் மற்றும் எரிவாயு  சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் போன்ற குறைபாடுகள் குறித்த புகார்களை மனுக்கள் மூலம் கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.