tamilnadu

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 23- எரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு தொடர்பாக வரப் பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 27-ம் தேதி பிற்பகல் 4 மணியளவில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.