திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் கால தாமதம், முறைகேடுகள் குறித்து கர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் 29 ம்தேதிஅன்று பிற்பகல் 3.00 மணியளவில் ருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.