புதுக்கோட்டை, அக்.16- மத்திய அரசு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தை சீர்குலைக்கும் நடவ டிக்கையை கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சட்டம் 1996 மற்றும் 36 மாநில கட்டுமானத் தொழிலா ளர் நலவாரியத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய கட்டுமானத் தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) சங்கம் சார்பில் நாடாளு மன்ற சபாநாயகருக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவுள்ளது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை போஸ்நகரில் உள்ள கட்டுமானத் தொழிலா ளர்களிடமிருந்து மனுக்களைப் பெறும் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் எம்.கோவிந்த ராசு, துணைச் செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்ற மனுக்களை புதுக்கோட்டை மாவட்டத்திலி ருந்து 30 ஆயிரம் தொழிலாளர்களிடமிருந்து பெற்று நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்ப உள்ளதாக ஏ.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.