புதுக்கோட்டை, ஆக.20- கூட்டுறவு நிறுவனங்களில் துணைப் பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர் பணி யிட இழப்புகளை தடுத்து நிறுத்த வலி யுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் வியாழக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைப்பதி வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கூட்டுறவுத்துறை ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் வி.கே.ஏ. மனோகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பா.ஆனந்தம், மாவட்டப் பொருளாளர் ஆர்.சரவணக் குமார், இணைச் செயலாளர் ஜி.இந்திரா, எஸ்.சங்கீதா, ஆசியாபானு போராட்டத் தில் பங்கேற்றனர்.