தஞ்சாவூர், அக்.13- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சி கள் சார்பில் அக்.13, 14 ஆகிய தேதி களில், தஞ்சை மாவட்டம் முழுவதும் 100 மையங்களில் பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு, அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிரச்சார இயக்கம் தொடங்கி நடைபெற்றது. திங்கள் கிழமையும் தொடர்ந்து நடக்கிறது. “ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப் பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்க ளுக்கு பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பு அதிகரித்திட, பொது முத லீட்டை அதிகரிக்க வேண்டும். அது வரை மத்திய அரசாங்கம் வேலை யில்லா இளைஞர்களுக்கு வேலை யில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 என்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். வேலை இழந்த தொழிலா ளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்கிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தி யாவை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தர வாத சட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும். நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருவோணம் ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் பி.கோவிந்தராஜூ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.எம்.இராமசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார், மாவட்டக்குழு கே. ராமசாமி, சிபிஐ கே.முத்து உத்திரா பதி, பால்ராஜ் மற்றும் இரு கட்சிகளின் ஒன்றியக்குழு, நகரக் குழுவினர் கலந்து கொண்டனர். அனந்தகோபாலபுரம், கொள்ளுக் காடு, கோட்டைக்காடு, நெய்வேலி, வெங்கரை, தோப்பநாயகம், திரு வோணம், ஊரணிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
வெள்ளியணை
இதே போல் இடதுசாரி கட்சிகளின் சார்பில் தெருமுனை கூட்டம், கரூர் மாவட்டம் வெள்ளியணை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்றது. கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெள்ளியணை கிளை செயலாளர் சி.வையாபுரி தலைமை வகித்தார். மேட்டுப்பட்டி கிளைச் செய லாளர் எஸ்.பி.ராஜேந்திரன் வர வேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரச் செயலாளர் எம்.ஜோதி பாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்தி ரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தண்டபாணி, எஸ்.பி. ஜீவானந்தம், நகர குழு உறுப்பி னர்கள் சக்திவேல், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தி இடதுசாரிக் கட்சிகள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழ மையன்று பிரச்சாரம் மேற்கொண்டது. பிரச்சாரத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் ந.விஜய ரங்கன் ஆகியோர் தலைமை வகித்த னர். கோரிக்கைகளை விளக்கி சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆர்.தர்ம ராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் மற்றும் நிர் வாகிகள் எம்.ஜோஷ், டி.சின்னையா, பி.ராமன், டி.ரகுபதி உள்ளிட்ட பேசி னர்.